தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இளவாலை, வசந்தபுரம் பகுதியில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான 50 வீடுகள் கையளிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந் நிகழ்வில் இலங்கைக்கான நோர்வே தூதுவராலயத்தின் முதன்மை செயலாளர், வீடுகளுக்கான பத்திரங்களை வழங்கினார். நோர்வே நாட்டின் 90 மில்லியன் நிதி உதவியுடன் யூ என் டி பி நிறுவனத்தின் மூலம் இவ் வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டன. ஒவ்வொரு வீடும் 7 இலட்சம் பெறுமதியில் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இன் நிகழ்வுகளில், இலங்கைக்கான நோர்வே தூதுவராலயத்தின் முதன்மை செயலாளர் மார்ட்டி ரொக்னேஸ், யூ என் டி பியின் பிரதிநிதி மசிமோ டயான, அரசாங்க அதிபர் ,டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும் !
Filed under: Uncategorized | Leave a Comment »